கோலாலம்பூர், பிப் 17 – பெரிக்காத்தான் நெஷனல் கூட்டணி, ஜோகூர் மாநிலத் தேர்தலில் வெற்றிப் பெற்றால், அம்மாநில அரசாங்க பொருளாதார ஆலோசகராக தமது சேவையை வழங்க தயாராக இருப்பதாக, அக்கூட்டணியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறிள்ளார்.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தில் அதிகமான வேலை வாய்ப்புகளையும், திறன் பயிற்சிகளையும் ஏற்படுத்துவதற்கான வியூகங்கள் தீட்டப்படுமென , முன்னாள் பிரதமரும், அம்மாநிலத்தின் முன்னாள் மெந்திரி புசாருமான அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக , நேற்றிரவு டான் ஶ்ரீ முஹிடின் யாசின், மெர்சிங்கில், Tenggaroh , Endau சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஜோகூர் மாநில தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்தார்.
இம்முறை, தமது Gambir சட்டமன்றத் தொகுதியை தற்காத்து போட்டியிடாத டான் ஶ்ரீ முஹிடின், பெரிக்காத்தான் நெஷனல் களமிறக்கும் வேட்பாளர்கள் ஊழல் , அதிகார முறைகேட்டை நிராகரிப்பவர்களாக இருப்பார்கள் என அவர் உறுதியளித்தார்.