புத்ரா ஜெயா, ஏப் 25 – ஜோகூர் Forest City யில் சூதாட்ட விடுதி திறக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்திருக்கிறார். இது உண்மையில்லை. சூதாட்ட லைசென்ஸ் எதுவும் வழங்கப்படவில்லை. இது ஒரு பொய்யான தகவல் என அவர் கூறினார். Johore Forest city மேம்பாட்டிற்காக மலேசியா இரண்டாவது சூதாட்ட லைசென்ஸ்ஸை பரிசீலிக்கிறதா என அன்வாரிடம் வினவப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பெர்ஜெயா தோற்றுவிப்பாளர் Vincent Tan மற்றும் Genting குழுமத்தின் தலைவர் Lim Kok Thay வுடன் கடந்த வாரம் அன்வார் விவாதித்ததாக இதற்கு முன் Bloomberg தகவல் வெளியிட்டது. $100 பில்லியன் அமெரிக்க டாலர் Forest City சொத்துடமை திட்டத்திற்கு சூதாட்ட விடுதி புத்துணர்வை ஏற்படுத்தும் என Blooberg தெரிவித்திருந்தது.