பொந்தியான், பிப் 26 – ஜோகூர் மந்திரிபுசாரும் மாநில அம்னோ தொடர்பு குழுத் தலைவருமான ஹஸ்னி முகமட், பெனுட் சட்டமன்ற தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.
நான்காவது தவணையாக பெனுட் தொகுதியை தற்காத்துக் கொள்வதற்கு போட்டியிடும் ஹஸ்னி முகமட்டை எதிர்த்து பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியை சேர்ந்த பெர்சத்து கட்சியின் இசா அப்துல் ஹமிட், பி.கே.ஆர் கட்சியின் ஹனிப் கஷாலி, பெஜூவாங் கட்சியின் Iskandar Noor Ibrahim ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்து மற்றும் பாஸ் வேட்பாளர்களை 4,447 வாக்குகள் பெரும்பான்மையில் ஹஸ்னி முகமட் வீழத்தினார் என்பது குறிப்பிடத்தகது.