ஜோகூர் பாரு, பிப் 9 – ஜோகூர் மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு , தேர்தல் ஆணையத்திற்கு 9 கோடியே 60 லட்சம் ரிங்கிட் செலவாகுமென அதன் தலைவர் Datuk Abdul Ghani Salleh தெரிவித்தார்.
அந்த தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்காக 49, 290 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதோடு, 1, 084 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்படுமென அவர் கூறினார்.
இதனிடையே, அம்மாநில தேர்தலுக்கான SOP நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
ஜோகூர் மாநிலத் தேர்தல் மார்ச் 12- ஆம் தேதி நடைபெறும் வேளையில், வேட்பாளர் நியமன நாள் பிப்ரவரி 26-ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும் .