கோலாலம்பூர், ஆகஸ்ட் -31, ஜோடிகளை மாற்றிக் கொண்டு கட்டுப்பாடற்ற செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் (swinger) நடவடிக்கையில் ஈடுபட்டதன் பேரில், பல்கலைக்கழக மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 36 பேர் கைதாகியுள்ளனர்.
தலைநகரிலும் பூச்சோங்கிலும் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சோதனைகளின் போது அக்கும்பல் சிக்கியது.
மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையத்தின் (MCMC) ஒத்துழைப்புடன் ஜுன் மாதம் முதல் உளவுப் பார்த்து, அவர்களைக் கைதுச் செய்ததாக புக்கிட் அமான் போலீஸ் கூறியது.
அந்த 36 பேரில் இருவர், ஒழுங்கீனச் செயல்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களைத் தேடும் இணையத்தள உரிமையாளர்கள் ஆவர்.
இதுவரை 147,000 ‘subscribers’ களை அவர்கள் பெற்றுள்ளனர்.
அந்த இணையத்தளத்தில் புதிய நட்புகளைத் தேடுவது, ஆபாச படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துகொள்வது, செக்ஸ் ‘சேவை’க்கான பேக்கேஜ்களின் பரிமாற்றம் என ‘ஜோராக’ அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
Subscribe செய்வதற்கு 388 ரிங்கிட் கட்டணமும், கட்டுப்பாடற்ற செக்ஸ் உறவுக்கு 400 ரிங்கிட்டும், ஜோடிகளை மாற்றிக் கொண்டு ஒழுங்கீனத்தில் ஈடுபட 350 ரிங்கிட்டும் விதிக்கப்படுகிறதாம்.
போதாக்குறைக்கு, video call மூலம் ‘நேர்முகத் தேர்வெல்லாம்’ நடத்தியே வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.