
ஜோர்ஜ் டவுன், செப் 8 – Datuk Keramat சாலையிலுள்ள எட்டு இரண்டு மாடி கடை வீடுகள் நேற்றிரவு நிகழ்ந்த தீவிபத்தில் அழிந்தன. தீ விரைவாகவும் வேகமாகவும் பரவியதால் எட்டு பாரம்பரிய கடைகளும் 90 விழுக்காடு அழிந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புப் குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றிரவு மணி 8.04 அளவில் அந்த கடைகளில் தீப்பிடித்ததாக கூறப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு படையினர் வருவதற்குள் எட்டு கடை வீடுகளில் தீ வேகமாக எரிந்துகொண்டிருந்தாகவும் அருகேயுள்ள தீயணைப்பு நிலையங்களின் தீயணைப்பு வீரர்களும் மற்றும் தொண்டூழிய தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இத்தீவிபத்தில் எவரும் காயம் அடையவில்லை. ஒரு உணவகம் மற்றும் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடையும் தீயில் அழிந்த கடைகளில் அடங்கும் என கூறப்பட்டது.