
கோலாலம்பூர், மார்ச் 29 – குவைத் நீதிமன்றம், தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோவிற்கு ( Jho Low ), கள்ளப் பண மாற்றம் தொடர்பான குற்றத்திற்காக , 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்திருக்கிறது.
தனது பங்காளியுடன் சேர்ந்து ஷேக் ( Sheikh) எனும் ஓர் ஆடவருக்கும், இரு வெளிநாட்டு ஆடவர்களுக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக , குவைத்தின் Al – Qabas எனும் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்தியின் படி, மலேசிய நாட்டின் நிதியை உட்படுத்திய கள்ளப் பண மாற்றம் தொடர்பில் அவர்களுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு தண்டிக்கப்பட்ட அந்த 2 வெளிநாட்டவர்களில் ஒருவர் ஜொ லோவும் எனவும் பெயர் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மலேசிய நிதி என அந்த ஊடகம் குறிப்பிடப்பட்டிருப்பது 1MDB நிதியே என Sarawak Report அதன் ஊடக அகப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.