Latestஉலகம்

ஜோ லோவுடன் கூட்டு ; ராப் இசைக்கலைஞருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபனம்

பிரபல ‘ராப்’ இசைக்கலைஞரும், இரு முறை உயரிய கிராமி (Grammy) விருதை வென்றவருமான, The Fugees ஹிப் ஆப் இசைக்குழுவை சேர்ந்த, Prakazrel ‘Pras’ Michel-க்கு எதிரான ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகள், அமெரிக்கா, வாஷிங்டன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான, பாராக் ஒபாமா, டோனல் டிரம்ப் ஆகியோரின் நிர்வாகத்தில் தலையிட, 1MDB மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும், தொழிலதிபர் ஜோ லோவுடன் Pras கூட்டு சேர்ந்து முயன்றுள்ளார்.

அதனால், உடந்தையாக இருந்தது, அந்நிய அரசாங்கத்தின் ‘ஏஜண்டாக’ செயல்பட்டது, சாட்சியாளர்களை மிரட்டியது, கள்ள பணமாற்று, பரப்புரை போலி நிதி அறிக்கையை தயாரித்தது என மொத்தம் பத்து குற்றச்சாட்டுகளை Pras எதிர்நோக்கியிருந்தார்.

அரசியல் சூழ்ச்சி நிறைந்த அந்த வழக்கு விசாரணையின் போது, செல்வாக்கு மிகுந்த பிரபல Hollywood நட்சத்திரம் Leonardo DiCaprio, அமெரிக்காவின் முன்னாள் சட்டத்துறை தலைவர்Jeff Sessions ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு, Pras-சுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!