Latestமலேசியா

ஜோ லோவை கண்டுபிடிக்க, மற்ற நாடுகளுடன் அரசாங்கம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துகிறது; கூறுகிறார் பிரதமர்

1MDB ஊழல் தொடர்பில் தேடப்பட்டு வரும் சர்ச்சைகுரிய தொழிலதிபர் ஜோ லோவை கண்டுபிடித்து, கூடிய விரைவில் நாடு கடத்தும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

ஜோ லோ எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை என்றாலும், அவரை திரும்ப அனுப்புவதற்கான செயல்முறையை விரைவுப்படுத்த, பல நாடுகளுடன் அரசாங்கம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக் காட்டினார்.

தூதரகம் அல்லது அரச தந்திர ரீதியாக அந்த பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜோ லோவை கண்டுபிடிப்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். ஆரம்பத்திலிருந்தே அதற்காக தாங்கள் கடினமாக பாடுபட்டு வருவதாக பிரதமர் சொன்னார்.

அது அவ்வளவு எளிதான விவகாரம் அல்லது. பல நாடுகள் அல்லது உளவுத் துறை சேவைகளை அது உள்ளடங்கி உள்ளது.

எனினும், ஜோ லோவை கண்டுபிடிக்கும் முயற்சியில், பல உலக நாடுகள் மலேசியாவுக்கு ஆதரவாக இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!