Latestமலேசியா

ஜோ லோவ் மியன்மாரில் தலைமறைவா? தகவல் இல்லை என்கிறார் IGP

கோலாலம்பூர், நவம்பர்-22, 1MDB வழக்கில் தேடப்படும் கோடீஸ்வரர் ஜோ லோவ் (Jho Low) மியன்மாரில் தலைமறைவாக இருப்பதாக எந்தவொரு தகவலும் இல்லையென, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு போலீசார் அது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என, தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) சொன்னார்.

ஆசியான் நாடுகளின் போலீஸ் படைகளுடன் அரச மலேசியப் போலீஸ் படை அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறது.

மியன்மாரும் ஆசியானின் ஓர் அங்கம் என்பதால், ஜோ லோவ் அங்கிருப்பது உண்மையென்றால் நிச்சயம் மலேசியாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்குமென IGP சொன்னார்.

ஜோ லோவ் மியன்மார் நாட்டில் ஒளிந்திருக்கலாமென பிரபல வழக்கறிஞர் தான் ஸ்ரீ முஹமட் ஷாஃபியி அப்துல்லா ( Tan Sri Muhammad Shafie Abdullah) சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் முதன்மை வழக்கறிஞரான அவர், 1MDB மற்றும் மற்ற வழக்குகளின் சொல்லப்படாத கதைகள் என்ற தலைப்பில் ஊடகங்கள் பங்கேற்ற ஆய்வரங்கில் அவ்வாறு சொன்னார்.

ஜோ லோவின் நெருங்கிய சகாவும், 1MDB-யின் முன்னாள் ஆலோசகருமான ஜாஸ்மின் லூவிடம் (Jasmine Loo) நடத்தியக் குறுக்கு விசாரணையின் வழி தாம் அம்முடிவுக்கு வந்ததாக ஷாஃபியி கூறிக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!