Latestமலேசியா

ஜோ லோ இன்னும் சீனாவில் தலைமறைவாக உள்ளார்

கோலாலம்பூர், செப் 1 – 1MDB மோசடி தொடர்பில் இன்னும் தேடப்பட்டு வரும் , தொழிலதிபர் ஜோ லோ (Jho Low) , சீனாவில் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

YouTube- பில் வெளியாகியிருக்கும், ஜோ லோ எங்கே ? எனும் முதல் தொடரில், ‘Billion Dollar Whale’ எனும் நூலை எழுதி வெளியிட்ட எழுத்தாளர் Bradley Hope , அந்த விபரத்தை வெளியிட்டிருக்கின்றார்.

அந்த தொடரில், அவர் மற்றொரு எழுத்தாளர் Tom Wright – டுடன் இணைந்து , ஷங்காய் Disneyland- ந்தில், ஜோ லோ அடையாளம் தெரியாத மேலும் இரு நபர்களுடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கின்றார்.

நம்பத்தகுந்த தரப்பிடம் இருந்து பெறப்பட்ட அந்த புகைப்படம் , 2019 டிசம்பர் 24 – இல் எடுக்கப்பட்டதாக அந்த எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கின்றார்.

மேலும், ஜோ லோவிற்கு திருமணமாகி இரு பிள்ளைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!