Latestஉலகம்

ஜோ லோ, சீனா, Macau-வில் இருக்கும் புகைப் படம் வெளியிடப்பட்டுள்ளது

ஷா அலாம், செப் 23 – 1MDB ஊழல் தொடர்பில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோ, சீனா, Macau-வில் இருப்பதாக கூறப்படும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளன. அப்புகைப் படம், Macau- விலுள்ள பேரங்காடி ஒன்றில் எடுக்கப்பட்டவை என நம்பப்படுகிறது. அப்புகைப் படத்தை, அமெரிக்க செய்தியாளர்களான Tom Wright மற்றும் Bradley Hope ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருக்கும் ஜோ லோவின் அந்த புகைப் படத்தை, தனியார் விசாரணை அதிகாரி ஒருவரிடமிருந்து தாங்கள் பெற்றதாக அவர்கள் கூறினர். குறிப்பாக, ஜோ லோவின் முகம் தெளிவாக பதிவாகியுள்ள புகைப் படத்தை அந்த அதிகாரி காட்டினார். எனினும், சில காரணங்களால் அந்த புகைப் படத்தை பிரசுரிக்க கூடாது என அவர் தங்களை கேட்டுக் கொண்டதாகவும் அந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

1MDB பணத்தை மீட்க ஏதுவாக, ஜோ லோ மிக தீவிரமாக தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில், அவரை தேட யார் தனியார் விசாரணை அதிகாரியை நியமித்தது என்பது தெரியவில்லை. மலேசிய அரசாங்கம் அல்லது மலேசிய அரசாங்கத்துக்கு உதவும் மூன்றாவது தரப்பினர் யாராவது அந்த விசாரணை அதிகாரியை நியமித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஜோ லோவுடன் அவரது மனைவி Jesselynn Chuan Teik Ying, உதவியாளர், மெய்காவலர் ஆகியோரும் அந்த புகைப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். எனினும், அந்த புகைப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!