டாமான்சாரா, நவம்பர்-20, சிலாங்கூர், கோத்தா டாமான்சாரா, டத்தாரான் சன்வேயில் 3 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களைத் திருடிய கும்பலை போலீஸ் தேடி வருகிறது.
நவம்பர் 14-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் புகார் செய்துள்ளனர்.
2 மடிக்கணினிகள், ஒரு tablet, பல்வேறு வங்கி அட்டைகள், தனிப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயிருக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர், பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
டத்தாரான் சன்வேயில் கார் கண்ணாடிகள் உடைக்கப்படுவதைக் காட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும் முன்னதாக X தளத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.