கோலாலம்பூர் , பிப் 25 – 1 லட்சத்து 50,000 ரிங்கிட்டில், இஸ்தானா நெகாராவிடமிருந்து டத்தோ விருதை பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய இரு ஆடவர்களைப் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
அச்சம்பவம் தொடர்பில் கைதான நபர்களில் ஒருவரான கார் விற்பனையாளர், மாநிலம் ஒன்றின் அரண்மனையில் தனிப்பட்ட பாதுகாவலராக வேலை செய்திருந்தார் என்பது தெரிய வந்ததது.
டத்தோ விருது பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட தனியார் நிறுவனமொன்றின் இயக்குநர் அளித்த புகாரைத் தொடர்ந்து, அந்த ஆடவன் கைது செய்யப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Amihizam Abdul shukor தெரிவித்தார்.