
கோலாலம்பூர், நவ 8 – நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை ஏமாற்றி கிட்டத்தட்ட RM1 பில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்திருப்பதாக “டத்தோ வீரா” (Datuk Wira) என தன்னை அழைத்துக் கொள்ளும் ஒரு பிரமுகர் தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் தொடங்கியுள்ளது.
AMLA எனப்படும் பண மோசடிப் பிரிவு, மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுத்துறை இணைந்து விசாரணை குழுவை அமைத்துள்ளதாக போலீஸ் படைத் தலைவரான ஐ.பி.பி டான் ஸ்ரீ ரஸாருடின் உசேன் தெரிவித்திருக்கிறார்.
டான் ஸ்ரீயினால் அந்த டத்தோ’ தற்காக்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முதலில் விசாரிக்க வேண்டியுள்ளது.
எங்களால் தகவல் வெளியிடப்படாதபோது, நாங்கள் விசாரிக்க வேண்டும் . அந்த செய்தியின் உண்மைத்தன்மையை முதலில் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
இப்போதைக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என இன்று புக்கிட அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஐ.ஜிபி தெரிவித்தார்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் “டத்தோ வீரா” என்ற தனி நபரால் பாதிக்கப்பட்டதாக ரஞ்சித் மோசடி பாதிக்கப்பட்டோர் செயலகத்தின் தலைவரான ஷா அப்துல் மாலேக் நேற்று கூறியிருந்தார்.