Latestமலேசியா

டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு வழகிய டத்தோ ஸ்ரீ உத்தாமா விருதை பினாங்கு ஆளுனர் மீட்டுக் கொண்டார்

கோலாலம்பூர், செப் 15 – டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு வழங்கப்பட்ட டத்தோ ஸ்ரீ உத்தாமா (Datuk Seri Utama) விருதை, பினாங்கு ஆளுனர் மீட்டுக் கொண்டுள்ளார்.

இன்று தொடங்கி அது அமலுக்கு வருகிறது.

பினாங்கு ஆளுனர் துன் அஹ்மட் புசி அப்துல் ரசாக், டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு வழங்கிய விருதை மீட்டுக் கொள்ள அனுமதி வழங்கியதாக, மாநில அரசாங்க செயலாளர் டத்தோ முஹமட் ஜகூவான் ஜகாரியா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

மாநில அமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப, அந்த விருது மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு வழங்கிய விருதுகளை கடந்த 12-ஆம் தேதி, சிலாங்கூர் சுல்தான் மீட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!