Latestமலேசியா

டத்தோ ஸ்ரீ நஜிப் சிறையில் துன்புறுத்தலுக்கு இலக்கானாரா? மசீச-விடம் ஆதாரம் உள்ளதா? லிம் கேள்வி

கோலாலம்பூர், செப் 23 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், காஜாங் சிறைச்சாலையில், சித்திரவதைக்கு இலக்காகியுள்ளதாக, முன் வைத்த குற்றச்சாட்டை மசீச நிரூபிக்க வேண்டுமென, DAP தலைவர் லிம் குவான் எங் சவால் விடுத்துள்ளார். அந்த குற்றச்சாட்டு உண்மையென்றால், அதனை எதிர்த்து தாமும், கெஅடிலான் கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், பக்காதான் ஹரப்பானின் இதர தலைவர்களும் கட்டாயம் குரல் கொடுக்க தயார் என்றாரவர்.

எனினும், நஜிப் துன்புறுத்தலுக்கு இலக்கானதற்கான ஆதாரம் எதையும் மசீச வைத்துள்ளதா என லிம் கேள்வி எழுப்பினார். டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு, சிறையில் சிறப்பு சலுகைகளை வழங்கப்படுவதாக மட்டுமே தற்சமயம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். அதுபோன்ற சலுகைகள் தமக்கோ, டத்தோ ஸ்ரீ அன்வாருக்கோ கிட்டியதில்லை என்றாரவர்.

லிம் குவான் எங், 1998-ஆம் ஆண்டு, தேச நிந்தனை குற்றத்திற்காக, 18 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார். அதே போல, டத்தோ ஸ்ரீ அன்வார், 1999-ஆம் ஆண்டும், 2015-ஆம் ஆண்டும் இருமுறை சிறைத் தண்டனை அனுபவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!