
லண்டன், மே 26 – லண்டன் Downing Street ட்டில் உள்ள பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலக தொகுதியின் வாயிற் பகுதியில் கார் ஒன்று மோதியதை தொடர்ந்து பாதுகாப்பு விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. எனினும் அந்த சம்பவத்திற்கு பயங்கராவாத தொடர்பு எதுவும் காரணம் இல்லையென பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆயுதப் படை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய வகையில குற்றவியல் சேதத்தை ஏற்படுத்தியதன் தொடர்பில் அபாயகரமாக வாகனம் ஓட்டிய ஆடவரை கைது செய்தனர். அந்த சம்வத்தில் எவரும் காயம் அடையவில்லை. அப்போது பிரிட்டிஷ் பிரதமர் Rishi Sunak அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தைக் கொண்ட Downing Street தொகுதியில் இருந்ததாகவும் எனினும் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.