
கோலாலம்பூர், மே 9 – பேராசிரியர் டாக்டர் என்.எஸ் ராஜேந்திரன் மற்றும் டாக்டர் ஹேனா முகர்ஜி எழுதிய மலேசிய இந்தியர்களும் கல்வியும் என்ற ( Malaysian indians and Education , Reimagined Development opportunities ) ஆங்கில புத்தகம் இன்று வெளியீடு கண்டது. Palan அறவாரியத்தின் தோற்றுநரும் சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் பாலன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சுபாங்கில் டேவான் துங்கு கிளப் நெகாராவில் நடைபெற்றது. தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த வெளியிட்டு விழாவில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் , ம.இ.காவின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் , பைனரி பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தலைவர் பேராரிசியர் டான்ஸ்ரீ ஜோசப் அடைக்கலம், உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியர்கள் இந்நாட்டிற்கு வருகை புரிந்து வரலாற்று பின்னணி கொண்ட அரிய தகவல்களுடன் இந்தியர்களின் கல்வி மற்றும் சீராய்வு
செய்யப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகள் , தொடக்கக் கல்வி, இடைநிலை , உயர்நிலைக் கல்வி , அரசாங்கம் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் , தனியார் துறை ஆற்ற வேண்டிய பங்கு, தன்னார்வ சமூக இயக்கங்கள் மற்றும் மகளிர் எதிர்நோக்கும் அம்சங்களுடன் 9 அத்தியாயங்களைக் கொண்ட விரிவாக எழுதப்பட்ட இந்த புத்தகம் பல்வேறு பயனுள்ள மற்றும் துல்லியமான அம்சங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நுலாசிரியர்களில் ஒருவதான டாக்டர் என்.எஸ் ராஜேந்திரன் தெரிவித்தார்.