Latestசினிமா

டாக்டர் பட்டம் பெற்ற சிம்புவின் படங்கள் வைரல்

சென்னை, ஜன 11 – சிம்பு இன்று முதல் டாக்டர் சிம்புவாக அழைக்கப்படுவார். 6 மாதக் குழந்தையாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கிய சிம்புவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்திருக்கிறது முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பல்கலைக்கழகம்.

தங்களுக்கு பிடித்த நடிகருக்கு அந்த சிறப்பு செய்யப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், டாக்டர் பட்டம் பெற்ற சிம்புவின் படங்களும் , காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியிருக்கின்றது.

தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு எனும் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!