Latest
டாக்டர் பி. ராமசாமி புக்கிட் அமானுக்கு விசாரணைக்கு அழைப்பு
கோலாலம்பூர், மார்ச் 3 – Loh Siew hong-கின் பிள்ளைகளின் மத மாற்று விவகாரத்தில் பெர்லிஸ் சமயத் துறையை தொடர்புபடுத்தி வெளியிட்ட பதிவிற்காக, பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமி இன்று புக்கிட் அமானுக்கு போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் .
தமது வழக்கறிஞருடன் காலை மணி 11-க்கு தாம் புக்கிட் அமானுக்கு செல்லவிருப்பதாக கூறிய டாக்டர் பி. ராமசாமி போலீஸ் விசாரணைக்கு தாம் ஒத்துழைக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வேளையில், பிள்ளைகளைத் தொலைத்திருந்த ஒரு தாயின் பரிதவிப்பையே நான் வெளிப்படுத்தியிருந்தேன். அதனால் அவ்விவகரத்தில் தாம் மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை என அவர் கூறினார்.