
கோலாலம்பூர், மே 2 -கடுமையான உழைப்பும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வும் கொண்ட குவாந்தானைச் சேர்ந்த டாக்டர் மலர் சாந்தி சந்திரகஸ்பேன் (Malar Santhi Santheragespan) தொழிலாளர் தினத்தின் சிறந்த தொழிலாளர் விருதை வென்றுள்ளார்.
இந்த விருது தமக்கு இன்ப அதிர்ச்சியை அளித்திருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.நேற்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தல் நடைபெற்ற தொழிலாளர் தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடமிருந்து 40 வயதான மலர் சாந்தி அந்த விருதை பெற்றுக்கொண்டார்.
அவருக்கு 10,000 ரிங்கிட்டிற்கான காசோலை மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது. பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களில் தாம் ஆற்றிவரும் சேவையும் இந்த விருது பெற உதவியுள்ளதாக குவந்தான் கொலும்பியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிவரும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மனித வள அமைச்சர் சிவக்குமார் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.