
கோலாலம்பூர், நவ 6 – பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் ராமசாமிக்கு எதிராக சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஸாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கில் 1.5 2 மில்லியன் ரிங்கிட் தொகையை ஒரு மாதத்திற்குள் ராமசாமி வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மலேசிய தமிழர் குரல் அமைப்பு கடந்த வாரம் நிதி தொடங்கியது. சமூதாயத்திற்கு குரல் கொடுத்த டாக்டர் ராமசாமிக்கு உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நிதிக்கு இன்று காலை 11 மணி வரை 914,720 ரிங்கிட் 31 சென் திரண்டது. நிதியுதவி வழங்கவிரும்பும் பொதுமக்கள் CIMB வங்கியில் 800 895 3145 என்ற கணக்கில் நிதியை வழங்கலாம் என தமிழர் குரல் பொறுப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.