கோலாலம்பூர், மார்ச் 1 – 1MDB ஊழல் விவகாரம் தொடர்பில் பேங்க் நெகாராவின் முன்னாள் கவர்னர் DR Zeti Akthar Aziz இன் கணவர் டாக்டர் Taufiq Ayman னிடம் MACC விசாரணை நடத்தாது.
சிங்கப்பூரில் உள்ள 1 MDB நிதியை திருப்ப பெறுவதற்கான பொறுப்பு மட்டுமே ஊழல் தடுப்பு நிறுவனமான MACC க்கு ஒப்படைக்கப்பட்டடதாக அதன் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.
எனினும் போலீஸ் விசாரணைக்கு Taufiq உட்பட்டிருப்பதாக அவர் கூறினார். Taufiq மீதான விசாரணை அறிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தயாரானவுடன் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு போலீஸ் சமர்ப்பிக்கும் என Azam Baki விவரித்தார்.