நாட்டின் பிரபலத் தொழில் அதிபர் டான் ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் மறைவுக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஏம்ஸ்ட் பல்கலைக்கழக கட்டிட நிர்மானிப்புக்கு ஆனந்த கிருஷ்ணன் தமது நிறுவனம் மூலம் 5 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கியதை விக்னேஸ்வரன் நினைவுக்கூர்ந்தார்.
அதேசமயத்தில் கல்வி கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் பற்றிய விபங்களை அவரின் கவனத்துக்கு அனுப்பி வைத்த போது தமது அறவாரியத்தின் வாயிலாக உதவி நல்கியதையும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
ஆனந்த கிருஷ்ணனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு அவரின் குடும்பத்தாருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.