டாமான்சாரா, ஆகஸ்ட் -19, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக பெண்ணொருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கோத்தா டாமான்சாராவில் உள்ள பிரபல பேரங்காடியில் ஆகஸ்ட் 6-ம் தேதி தாம் அத்தொல்லைக்கு இலக்கானதாக சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ள வீடியோவில் 20 வயது அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளதாகவும், இனியாவது அந்நபர் தன்னைத் தொந்தரவு செய்ய மாட்டார் என்ற எதிர்பார்ப்பிலும் போலீசில் புகார் செய்ததாக அப்பெண் கூறினார்.
இவ்வேளையில் போலீஸ் மேற்கொண்ட தொடக்கக் கட்ட விசாரணையில், சந்தேக நபர் அரசு நிறுவனமொன்றின் கௌரவ இயக்குநர் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தகவல் தெரிந்தோர் பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.