
வாஷிங்டன், மார்ச் 16 – Tik Tok – கின் சீன உரிமையாளரான ByteDance நிறுவனம் தனது பங்குகளை விற்குமாறு, அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது,
அவ்வாறு செய்யத் தவறினால், அந்த டிக் டாக் செயலி அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுமென , அந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 10 கோடி பயனர்களை டிக் டாக் கொண்டுள்ளது. அந்த அமெரிக்க பயனர்களின் தகவல்களை திருடி, டிக் டாக் சீனா அரசாங்கத்துக்கு வழங்கலாமென அமெரிக்கா நீண்ட காலமாகவே அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றது.