Latestமலேசியா

போலி அடையாள அட்டையை பயன்படுத்தி 29 ஆண்டுகளாக ஆசிரியர் தொழில் செய்தவர் கைது

கெனிங்காவ், பிப் 23 – கடந்த 29 ஆண்டுகளாக சபாவின் Tenom-மில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்காக, போலி அடையாள அட்டையைப் பயன்படுத்திய ஆடவர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 10 மாத சிறைத்தண்டனையும் RM 6,000 ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது. 

தேசிய பதிவுத் துறையின் சோதனையில் குற்றம் சாட்டப்பட்டவரான Ridal Abdul Kadir போலியான தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியது தெரியவந்தது. 

மேலும் ஆய்வு செய்ததில், குற்றம் சாட்டப்பட்டவர் அதே எண் மற்றும் பெயருடன் தற்காலிக அடையாள ஆவணத்தை வைத்திருந்தார் என்பதும் அவரது பிறப்புச் சான்றிதழில் அவர் குடியுரிமை இல்லாதவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

இதனிடையே, 53 வயதான Ridal Abdul Kadir, குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு மாஜிஸ்திரேட் தண்டனை விதித்தார். ஜனவரி 29 அன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ரிடால் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவருக்குக் கூடுதலாக ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் மாஜிஸ்திரேட் கூறினார். விதிக்கப்பட்ட அபராதத்தையும் Ridal Abdul செலுத்தினார். 

29 ஆண்டுகால கற்பித்தலின் போது, Ridal பள்ளியில் நல்ல நடத்தையை வெளிப்படுத்தியதோடு எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபடாத நிலையில், அவருக்கு தண்டனையை குறைக்குமாறு தற்போது அவரின் வழக்கறிஞர் மேல் முறையிட்டை முன்வைத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!