
மலாக்கா, டிச 2 – Tik Tok கில் ( டிக் டோக்) அறிமுகமான வயது குறைந்த பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக 20 வயது இளைஞனுக்கு 7 ஆண்டு சிறை மற்றும் இரு பிரம்படிகளை அனுபவிக்கும்படி ஆயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது . பாதிக்கப்பட்ட அந்த 17 வயது இளம் பெண் கடந்த மாதம் குழந்தையை பிரசவித்துள்ளார். முகமட் ஹசிக் ரம்டான் என்ற அந்த இளைஞன் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து சிறைத் தண்டனை மற்றும் பிரம்படிகள் வழங்குவதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அபு அடாம் தீர்ப்பளித்தார். நாடு முழுவதிலும் வயது குறைந்த பெண்கள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு இந்த தண்டனையை விதிப்பதாக நீதிபதி Darmafikri Abu Adam தீர்ப்பளித்தார்.