
கோலாலம்பூர், மார்ச் 5 – டிக் டாக்-கில் தங்களது நிறுவனத்தின் தயாரிப்புப் பொருளை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையின் போது, டிக்டாக் பிரபலமான Eswary Garg என்பவர், முறையின்றி பேசியதற்காகவும், தவறான அவரது செயலுக்காகவும் , Sailajah Empire நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொண்டது.
அவரது செயல், தங்களது வர்த்தக முத்திரையின் நன்மதிப்பை மீறியிருப்பதாகவும், அந்த விவகாரத்தை தமது தரப்பு விசாரிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அந்நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் டிக் டாக்கில் , ஒருவரது பேச்சும் செயலும் சமூகத்தில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, சமூக வலைத்தளத்தில், தங்களது நிறுவனத்தை பிரதிநிதிப்பவர்கள், முறையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதோடு தவறாக செயல்படுவதையும் Sailajah நிறுவனம் ஒருபோதும் அனுமதிக்காது என அந்நிறுவனம் குறிப்பிட்டது.
முன்னதாக, பெண்களின் அந்தரங்கப் பகுதி தொடர்பான ஒரு பொருளை டிக் டாக்கில் Eswary Garg என்பவர் விளம்பரப்படுத்திய விதம் முறையாக இல்லையென , பலரும் விமர்சித்திருந்தனர்.