
கூலாய் ,பிப் 28 – நாட்டின் 5G அலைக்கற்றை பயன்பாடு கடந்த டிசம்பரில் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 82.4 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் (Teo Nie ching) தெரிவித்திருக்கிறார்.
அண்மைய ஆண்டுகளில் தகவல் தொடர்பு அணுகலை விரிவுபடுத்துவதில் மலேசியாவை உலகின் அதிவேக நாடுகளில் ஒன்றாக மாற்றியதாக அவர் கூறினார்.
மக்களிடையே 5G அணுகல் ஆக்கப்பூர்வமான முறையில் முன்னேற்றத்தை கொண்டுவந்துள்ளது. நாடு முழுவதிலும் 5G அலைக்கற்று வசதியின் பயன்பாடு கடந்த ஆண்டு 24.6 விழுக்காட்டிலிருந்து 53.35 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
ஜோகூரில் 4G அணுகல் விகிதம் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிவரை 99.9 விழுக்காட்டை எட்டியுள்ளது என இன்று புத்ரா குலாய் ஹாலில் Future Health 4 All இன் (FH4A) நிறைவு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர் கூட்டத்தில் தியோ நீ சிங் கூறினார் .
சுகாதாரத் துறையை மேம்படுத்துவதில் 5G நெட்வொர்க்கின் முழுத் திறனையும் உணரும் வகையில் இலக்கவியல் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை ஆகியவை சுகாதாரத் துறைக்கு பயனளிக்கும் வகையில் வளர்ச்சி கண்டுள்ளது.
மக்களிடையே 5G அணுகல் ஊடுருவல் விகிதம் நேர்மறையான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது என்றார்.