Latestமலேசியா

டிசம்பர் 1ஆம் தேதி முதல் Gardenia ரொட்டிகள் விலை உயர்வு

கோலாலம்பூர், நவ 25 – Gardenia ரொட்டி நிறுவனம் தனது ரொட்டிகள் மற்றும் பேக்கரி தயாரிப்பின் இதர ரொட்டிகளின் விலையை உயர்த்தியுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து Gardenia ரொட்டி தயாரிப்பு பொருட்களின் புதிய விலைகள் அமலுக்கு வரும் என சில்லறை வர்த்தகர்களுக்கு கடித வாயிலாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ரொட்டி தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயர்ந்ததால் ரொட்டி விலைகள் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

400 கிரேம் Gardenia original classic ரொட்டி வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் விலை 2 ரிங்கிட் 50 சென்னிலிருந்து 2 ரிங்கிட் 80 காசாக அதிகரிக்கப்பட்டுள்ளது. Jumbo எனப்படும் 600 பெரிய பேக்கட்டைக் கொண்ட ரொட்டி 3 ரிங்கிட் 55 சென்னிலிருந்து 4 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. தற்போது 2ரிங்கிட் 50 சென்னாக விற்கப்படும் 400 கிரேம் Gardenia Brand & wheat Germ ரொட்டியின் வைல 2 ரிங்கிட் 90 சென்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே Gardenia ரொட்டிகளின் புதிய விலைகள் குறித்து அதன் நிர்வாகத்துடன் நாளை நடைபெறும் சந்திப்புக்குப் பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!