புத்ராஜெயா, டிசம்பர்-28, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ, டிஜிட்டல் முறையிலான தனது கண்காணிப்பை மேம்படுத்தவுள்ளது.
அவ்வகையில், போக்குவரத்துக் குற்றங்களைப் புரிவோரை மேலும் ஆக்கப்பூர்வமாகக் கண்டறிய AI அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் ஆராயப்படுகிறது.
மரண விபத்துகளுக்குக் காரணமாக விளங்கும் போக்குவரத்துக் குற்றங்கள் மீதான அமுலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே அதன் நோக்கமென, JPJ தலைமை இயக்குநர் Aedy Fadly Ramli தெரிவித்தார்.
இவ்வேளையில், அடிக்கடி விபத்துகள் நிகழும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் JPJ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருவர்.
சாலை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களுக்குப் பேரளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரமும் தொடங்கப்படுமென்றார் அவர்.
இளம் வாகனமோட்டிகள் மற்றும் அதிக ஆபத்தைக் கொண்டுள்ளவர்களை அப்பிரச்சார இயக்கம் குறி வைக்கும்.
பாதுகாப்பு வார்பட்டை அணிவது, பாதுகாப்பான வேக அளவு, சாலையில் பொறுப்பாக நடந்துகொள்ளது போன்ற அம்சங்களுக்கு அதில் முன்னுரிமைக் கொடுக்கப்படும்.
அதே சமயம், பேருந்து, லாரி போன்ற வர்த்தக வாகனங்களும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவது உறுதிச் செய்யப்படும்.
அதன் மூலம் கனரக வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்துகளைக் குறைக்க முடியுமென Aedy நம்பிக்கைத் தெரிவித்தார்.