Latestமலேசியா

டிஜிட்டல் பொருளாதார உயர்வுக்கு இந்தியாவைத் துணைக்கு அழைக்கும் மலேசியா- கோபிந்த் சிங் தகவல்

கோலாலம்பூர், அக்டோபர்-10, உலக டிஜிட்டல் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் மலேசியா சரியான தடத்தில் பயணிப்பதாக, இலக்கயியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார்.

அடுத்தாண்டு இறுதியில் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் KDNK எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு, 25.5 விழுக்காட்டு பங்களிப்பைத் தருமென்ற கணிப்பின் அடிப்படையில் அது அமைகிறது.

கடந்த 8 மாதங்களில் பதிவான அடைவுநிலையை வைத்துப் பார்த்தால், அந்த 25 விழுக்காட்டு இலக்கை அடைவது மட்டுமல்ல, தாண்டுவதும் சாத்தியமே என கோபிந்த் சொன்னார்.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை உந்தச் செய்யும் முயற்சிகளுக்கு, தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவான் நாடான இந்தியாவைத் துணைக்கு அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

அதனால் தான் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த, இரு நாடுகளும் 8 கருத்திணக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

நேற்றிரவு MIBC எனப்படும் மலேசிய-இந்திய வர்த்தகர்கள் மன்றத்தின் 16-ஆவது வருடாந்திர இரவு விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது, கோபிந்த் சிங் அவ்வாறு கூறினார்.

அந்நிகழ்வில் சிறப்பம்சமாக, இரு தரப்பு வர்த்தக உறவில் சிறந்து விளங்கிய IJM, Daya Maju – DMIA, MK Tron, Hartasuma, SMH Rail, HSS Engineers ஆகிய 6 நிறுவனங்களுக்கு, Bilateral Synersy Excellence Award எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

அதே சமயம், MIBC-யின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட தோற்றுநர்களை கௌரவிருக்கும் வகையில், அதன் 6 ஆளுமைகளுக்கு Founders’ Hallmark of Excellence Award எனப்படும் சிறப்புத் தர விருது வழங்கப்பட்டது.

MIBC தலைவர் தான் ஸ்ரீ இன்ஜினியர் குணா சித்தம்பலம், துணைத் தலைவர் தான் ஸ்ரீ என். புவனேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள் அவ்விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!