
குவா மூசாங், ஆக 22 – செம்பனை தோட்டத்தில் உள்ள குலைகளை டிரக்டரில் ஏற்றிக்கொண்டிருந்தபோது திடீரென அந்த டிரக்டர் நகர்ந்து அதன் டயர் உடல் மேல் ஏறியதால் தொழிலாளி ஒருவர் மாண்டார். இந்த பரிதாபமான சம்பவம் Gua Musang , Sungai Bayu விலுள்ள Serasa தோட்டத்தில் மதியம் மணி 12.10 அளவில் நிகழ்ந்தது. Syaiful என்று அடையாளம் கூறப்பட்ட 34 வயது தொழிலாளியின் உடலில் ஏறியதால் அவர் மரணம் அடைந்தார் என்று Gua Musang போலீஸ் தலைவர் Sik Choon Foo வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். உடனடியாக அவர் டிரக்டரில் மீது ஏறி அதனை நிறுத்த முயன்றபோது திடிரென கீழே விழுந்ததால் டயர் அவர் மீது ஏறியதால் கடுமையான காயத்திற்குள்ளாகி மரணம் அடைந்ததாக Sik Choon Foo வெளியிட்ட அறிகையில் தெரிவித்தார்.