Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

டிரம்பின் வர்த்தக போரை தொடர்ந்து முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் வலுவடைந்தது

நியூயார்க், பிப் 3 – அமெரிக்க டாலர் இன்று உயர்ந்ததைத் தொடர்ந்து அதன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவின் நாணயங்களை பல ஆண்டுகளில் மிகக் குறைந்த வீழ்ச்சிக்கு சரிவைடையச் செய்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரியை உயர்த்தி வர்த்தகப் போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, சீனாவின் யுவான் வர்த்தகத்தில் வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.

அமெரிக்க டாலரின் ஆதாயங்கள் பரந்த அளவில் இருந்தன, யூரோவும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தது மற்றும் பொதுவாக பாதுகாப்பான புகலிடமாக செயல்படும் சுவிஸ் பிராங்க் (Swiss Franc), மே மாதத்திலிருந்து அதன் பலவீனமான நிலைக்கு சரிந்தது.

அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளான கனடா மற்றும் மெக்சிகோ உடனடியாக பதிலளித்தன.

அதே வேளையில் உலக வர்த்தக அமைப்பிற்கு டிரம்பின் வரிவிதிப்புக்கு சவால் விடுவதாக சீனா தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!