
வாஷிங்டன், ஆகஸ்ட்டு 18 – டொனல்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது, அவருக்கும், டெக்சாஸ் அதிகாரிகள் எண்மருக்கும் விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய 55 வயது பெண் ஒருவருக்கு, 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், கடனா ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமையை வைத்திருக்கும் Pascale Ferried எனும் அப்பெண், தடை செய்யப்பட்ட உயிரியல் ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு அந்த தண்டனையை விதித்தது.
டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிக்கூடாது என மருட்டல் விடுத்து, அவர் சொந்தமாக தயாரிக்கப்பட்ட விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. எனினும், அச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.
2019-ஆம் ஆண்டு, அபாயகர ஆயுதங்களை வைத்திருந்த அப்பெண், டெக்சாசில் முதல் முறையாக கைதுச் செய்யப்பட்டு பத்து வாரங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டார்.
அதன் பின்னர், 2020-ஆம ஆண்டு, செப்டம்பரில், மீண்டும் ஆயுதங்களுடன் நியூ யார்க்கில் நுழைய முற்பட்ட போது அவர் கைதானார்.