கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 – மக்கள் சக்தி கட்சியின் ஒத்துழைப்புடன் கலாச்சார மற்றும் கலை ஆராய்ச்சி அமைப்பின் தோற்றுநரும் தலைவருமான Bai Shi Yin-யின் தலைமையில், ஓரியண்டல் (Oriental) டிரம்ஸ் வாசிக்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 4,000 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஓரியண்டல் டிரமஸ் அடித்து, கின்னஸ் உலக சாதனையைப் படைக்கும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீன மாணவர்களோடு சுமார் 500 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இந்த சாதனைக்கான முயற்சியில் பங்கெடுக்கவுள்ளனர்.
மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை Bai Shi Yin நடத்த முன்வெடுத்துள்ளதாக, மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
Interview
அந்த எண்ணத்தை நிறைவேற்றவே மக்கள் சக்தி கட்சியும் உடனிருந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஒன்றிணைக்கும் வேலைகளைச் செய்து வருவதாக தனேந்திரன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் முழு ஆதரவுடன் நடைபெறவுள்ள இந்த ஓரியண்டல் டிரம்ஸ் வாசிக்கும் நிகழ்ச்சிக்கு, Bai Shi Yin வாசிக்கும் முறைகளை கற்றுக் கொடுப்பது மட்டுமின்றி உடைகளையும் வழங்கவுள்ளதாக அவர் விவரித்தார்.
Interview
Closing
எதிர்வரும் 28ஆம் திகதி செப்டம்பர் மாதம், புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.