தஞ்சோங் மாலிம், பிப் 12 – சிலிம் ரிவருக்கு அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 362. 8 ஆவது கிலோமீட்டரில் கார் ஒன்று டிராய்லர் லோரிக்கு அடியில் புகுந்ததில் அக்காரில் இருந்த இருவர் உயிரிழந்தனர். விடியற்காலை மணி 5.40 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் புரோட்டோன் வாஜா காரிலிருந்த 33 மற்றும் 27 வயதுடைய இருவர் கடுமையாக காயம் அடைந்ததைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.
அந்த கார் டிராய்லர் லோரியின் பின்புறம் மோதிதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக Mualim மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Sulizmie Affendy Sulaiman தெரிவித்தார். அந்த காரின் ஓட்டுனரும் அவரது அருகே அமர்ந்திருந்தவரின் உடல்கள் நசுங்கியதால் மரணம் அடைந்தனர்.