
கோலாலம்பூர், ஜூன் 30 – மூவர் பயணம் செய்த மைவி கார் டிராய்லர் லோரியுடன் மோதியதில் அக்காரில் பயணம் செய்த B. ஜனனி த.பெ பாலகிருஷ்ணன் , P.S. தமிழ்ச்செல்வம் அவரது சகோதரர் என நம்பப்படும் P. S. சசிதரன் ஆகியோர் மாண்டனர். இன்று அதிகாலை மணி 4.30 அளவில் உலு சிலாங்கூர், செரண்டா தேசிய தொழில்திறன் மையத்திற்கு முன் நிகழ்ந்த விபத்தில் ரவாங்கிலிருந்து செரண்டா சென்று கொண்டிருந்த மைவி கார் டிராய்லர் எதிரே வந்த லோரியுடன் நேருக்கு நேர் மோதியது. நொறுங்கிய காரில் சிக்கிக் கொண்ட 25 வயதுடைய ஜனனி, 25 வயதுடைய தமிழ்ச் செல்வம் மற்றும் 18 வயதுடைய சகிதரன் ஆகிய மூவரும விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர் என கோலாகுபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் இயக்குனர் Norazam Khamis தெரிவித்தார். அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுனருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
தமிழ்ச் செல்வனும் ,சதிதரனும் ராவாங் Taman Perdana வை சேர்ந்தவர்கள் என்றும் ஜனனி பந்தாய் டாலாம் பி.பி.ஆர் குடியிருப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகிறது.