பெக்கான், ஆகஸ்ட்-7, பஹாங், பெக்கான்-ரொம்பின் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிரேய்லர் லாரி வீட்டுக்குள் புகுந்து உயிரிழப்பை ஏற்படுத்தியச் சம்பவம் மாநில சுல்தானின் கவனத்தைப் பெற்றுள்ளது.
வீடு கடுமையாகச் சேதமுற்ற குடும்பத்திற்கு அதே பகுதியில் புதிய வீட்டொன்றை இலவசமாகத் தருவதற்கு மேன்மைத் தங்கிய பஹாங் சுல்தான் அல் சுல்தான் அப்துல்லா (Al-Sultan Abdullah) முன்வந்துள்ளார்.
தகவலறிந்து நேரில் வந்து குடும்பத்தைச் சந்தித்த போது சுல்தானே அவ்விஷயத்தைத் தெரிவித்ததாக, பாதிக்கப்பட்ட நபரான Mohd Fakhrul Hafiz Nasruddin சொன்னார்.
நடந்தவற்றுக்காக ஆழ்ந்த அனுதாபமும் தெரிவித்த அல்-சுல்தான் அப்துல்லா, குடும்பத்துக்கு நீதி கிடைக்க சம்பந்தப்பட்ட லாரி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்திச் சென்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த அக்கோர விபத்தில், ஜோகூரிலிருந்து குவாந்தான் நோக்கி சுண்ணாம்பு சிலிங்கை ஏற்றி வந்த அந்த டிரேய்லர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் வலப்புறத்திலிருந்த வீட்டை மோதியது.
அதில், அப்போது வீட்டிலிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த வேளை, மேலும் மூவர் காயமடைந்தனர்.