
புது டில்லி, ஜன 9 – மோசமான மூடுபனியால் இந்தியா புதுடில்லியில் விமான பயணங்கள் தாமதமடைந்திருப்பதோடு, பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
விமான பயணங்கள் ஒத்தி வைக்கப்படுவதால், பயணிகள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, புதிய பயண நேர விபரத்தை சரிபார்த்துக் கொள்ளும்படி, புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வேளையில், புதுடில்லி உட்பட இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான பஞ்சாப், ஹர்யானா, உத்தர பிரதேசம், பிஹார், ஆகிய பகுதிகளில் நாளை வரை மோசமான பனிமூட்டம் சூழ்ந்திருக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை கணித்திருக்கின்றது.
இதனால் பார்க்கும் தூரம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு, நுரையீரல் தொடர்பான சுகாதார பாதிப்புக்கு மக்கள் ஆளாகலாமெனவும் அம்மையம் எச்சரித்திருக்கிறது.
இதனிடையே, 2 கோடி மக்கள் வசிக்கும் புதுடில்லியில், இன்று தட்பவெட்ப நிலை 5 பாகை செல்சியாக பதிவாகியிருக்கிறது.