அமிதபாத், மே – டில்லியைத் தெடர்ந்ந்து Ahmedabad ட்டிலுள்ள சில பள்ளிகளிலும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்களை பெற்றுள்ளன. பல பள்ளிகளுக்கு குண்டு வெடிப்பு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் கிடைத்திருப்பதை Ahmedabat நகரின் போலீஸ் தலைவர் G.S Malik உறுதிப்படுத்தினார். ரஷ்யாவின் Server ரிலிருந்து பெறப்பட்ட மிரட்டலில் அரபு மொழியில் பள்ளிகளில் குண்டு வெடிப்பு நடைபெறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலின் நம்பகத்தன்மை குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக போலிஸ் கமிஷனர் தெரிவித்தார். Ahmedabat உட்பட குஜராத்தில்
26 தொகுதிகளிலும் வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது இந்த மிரட்டலைத் தொடர்ந்து வெடிகுண்டு அகற்றும் பிரிவு, சிறப்பு நடவடிக்கைப் பிரிவு , போலீஸ் சிறப்பு நடவடிக்கை பிரிவு பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.