Latestமலேசியா

டி.ஏ.பி மாநில தேர்தல்; லிம் குவான் எங் கையே ஓங்கியுள்ளது

கோலாலம்பூர், மே 5 – டி.ஏ.பி மாநில தேர்தல்களில் லிம் குவான் எங்கின் கையே இன்னமும் ஓங்கியிருக்கிறது.

ஜோகூர் டி.ஏ.பி தேர்தலில்கூட  கட்சியின்   வியூக பொறுப்பாளரான லியூ சின் தோங் தோல்வி அடைவார் என இதற்கு முன் ஆருடங்கள் வெளியாகிய போதிலும் அந்த ஆருடங்களை எல்லாம்  முறியடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

மாநில  நிர்வாக குழுவுக்கான  தேர்தலில் லியூ  சின் தோங்  மூன்றாவது இடத்தை பெற்றதோடு  நிர்வாக குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஐவர் அவரது ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஏ.  பி யில் எப்போதும்  சீன கல்வியாளர்கள்  மற்றும்  ஆங்கில கல்வியாளர்கள் என இரண்டு அணிகள்  இருந்து வருகின்றனர்.

மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்காக  சீன கல்வியாளர்கள் ஒதுக்கப்படுவதாக  ரோனி இயோ போன்ற  தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.

ஜோகூரில் யோ பீ  லின்,  தியோ நீ சிங், மற்றும் லியூ சின்  தோங்  ஆகிய அனைவரும் சீன  பள்ளியின் பின்னணியைக் கொண்டவர்கள்.

எனினும்  ஆங்கில கல்வி பின்னணியைக்   கொண்ட லிம் குவான் எங்கின் தீவிர  ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

பேரா டி.ஏ.பி தலைவர்  Nga kor Mingகும்  சீனப் பள்ளியியில் பயின்றவர்தான்.  ஆனால் இவர்கள் அனைவருமே  கட்சியின்  தலைமை செயலாளர்  லிம்  குவான் எங்கின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

மொத்தத்தில்  மாநில டி.ஏ.பி தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர்  லிம் குவான் எங்கின் ஆதரவாளர்களாக உள்ளனனர் .

அடுத்த மாதம் நடைபெறும் கட்சி தேர்தலில் லிம் குவான் ஆதரவு பெற்றவர்கள் மத்திய செயலவைக்கு தேர்வு பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!