Latestமலேசியா

டீசல் உதவித் தொகையை அரசு மீட்டுக் கொள்ளவில்லை – உள்நாட்டு வாணிகம் வாழ்க்கை செலவின அமைச்சு விளக்கம்

கோலாலம்பூர், ஜூன் 22 – டீசல் உதவித் தொகையை அரசாங்கம் மீட்டுக்கொள்ளவில்லை.மாறாக முன்பு மொத்தமாக பகிர்ந்துகொண்ட உதவித் தொகை இலக்கிடப்பட்ட உதவித் தொகையாக வழங்கப்படுவதாக உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் துணை தலைமை செயலாளர் டத்தோ ரோசியா அபுடின் ( Roziah Abddin ) தெரிவித்தார். தீபகற்ப மலேசியாவில் 14 லட்சம் (1.4 juta) டீசல் வாகனங்கள் மற்றும் சரக்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 23 வகை தரை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் 10 வகை தரை பொது போக்குவரத்து பொது வாகனங்களும் டீசல் உதவித் தொகையை பெறுவதற்கான தகுதியை கொண்டுள்ளன.

டீசல் வாகனங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட உரிமையாளர்களும் அதாவது Budi Madani திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று வருவதாகவும் ரோசியா அபுடின் விவரித்தார். 2019ஆம் ஆண்டில் டீசலுக்கான உதவித் தொகையாக
1.4 பில்லியன் ரிங்கிட்டும், 2022 ஆம் ஆண்டில் 20 பில்லியன் ரிங்கிட்டும் கடந்த ஆண்டில் 14.3 பில்லியன் ரிங்கிட்டும் டீசலுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!