கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – புதிய அறிமுகம் அல்லது நண்பரைப் போன்ற குரலைப் பயன்படுத்தி, கஷ்டத்தின் காரணமாகக் கடன் வேண்டும் என்று கேட்கும் அழைப்புகள் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இது ‘டிப்ஃபேக் (Deepfake)’ பயன்படுத்திச் செய்யும் மோசடி தந்திரமாகும்.
இதனால் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட்டை பலர் இழந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக குற்றவியல் மற்றும் வணிகப் புலனாய்வுத் துறையில், முறையே 26 மற்றும் 50 வயதுடைய இரண்டு பெண்களின் புகார்கள் கிடைத்துள்ளதாக அதன் இயக்குநர் டத்தோ ஸ்ரி ராம்லி முகமட் யூசப் (Seri Ramli Mohamed Yoosuf) தெரிவித்தார்.
ஒருவரிடம் கடன் வாங்கும் நோக்கத்திற்காக அவரது ‘நண்பர்’ எனக் கூறி 3,000 ரிங்கிட்டும், மற்றொருவரிடம் ‘அறிமுகமானவர்’ என்று 4,800 ரிங்கிட்டும் மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல, திரங்கானுவிலும் ‘அறிமுகமானவர்’ எனக் கூறி அறியப்படாத எண்ணால், 62 வயதான ஒருவர் இந்த மோசடியில் சிக்கியுள்ளார்.