Latestமலேசியா

டுங்குனில் துரப்பண மேடையிலிருந்து விழுந்தவரை இரும்புக் கம்பி குத்தியது

டுங்குன், டிசம்பர்-21,திரங்கானு டுங்குனில் பழைய மின் நிலைய துரப்பண மேடையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளர், தனது வலது தோள்பட்டையில் இரும்புக் கம்பி குத்தி படுகாயமடைந்தார்.

பாக்கா தொழிற்பேட்டையில் நேற்று மாலை அவர் இரும்புக் கம்பிகளை வெட்டிக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்தின் போது, செயல்பாடு நிறுத்தப்பட்ட அம்மின் நிலையத்தின் ஏழாவது மாடியில் மேலுமிரு நண்பர்களுடன் அவர் பணியில் ஈடுபட்டிருந்தார்.

நல்ல வேளையாக body harness எனப்படும் பாதுகாப்பு சேணத்தை அணிந்திருந்ததால் தரையில் விழாமல் அந்தரத்தில் அவர் தொங்கிக் கொண்டிருந்தார்.

84 மீட்டர் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த 34 வயது அவ்வாடவரை, தீயணைப்பு-மீட்புத் துறையினர் பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

சம்பவ இடம் வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் இரத்தப் போக்கை நிறுத்த உடனடியாக காயத்திற்குக் கட்டுப் போட்டு, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!