ஹோங் கோங், ஆகஸ்ட்-4, மலேசியாவில் இருந்து டுரியான் பழங்களுடன் மறைத்து வைக்கப்பட்டு கடத்திக் கொண்டு வரப்பட்ட ஹெரோயின் வகைப் போதைப்பொருள் ஹோங் கோங்கில் சிக்கியுள்ளது.
டுரியான் மற்றும் மொச்சி (Mochi) உணவு என அறிவிக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட பொட்டலங்களிலிருந்து 8.4 கிலோ கிராம் ஹெரோயினை, ஹோங் கோங் அனைத்துலக விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உலர்ந்த ஐஸ் என்ற போர்வையில் 24 நுரை பொட்டலங்களில் வைக்கப்பட்டு, டுரியான் பழங்களுடன் வைக்கப்பட்டிருந்த அப்போதைப்பொருளின் மதிப்பு 5.8 மில்லியன் ஹோங் கோங் டாலர் என கூறப்படுகிறது.
இதையடுத்து 25 மற்றும் 53 வயதிலான 2 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அபாயகர போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கு ஹோங் கோங்கில் 5 மில்லியன் ஹோங் கோங் டாலர் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம்.