
கோலாலம்பூர், மார்ச் 16 – டுரியான் பழங்களுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ள போதிலும் அரசாங்க தலையீடு இன்றி அந்த தொழில்றை சுயமாக செயல்படமுடியும் என்பதால் டுரியான் வாரியத்தை அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. எனினும் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் டுரியான் வாரியம் ஒன்றை அமைக்கும் திடடத்தை விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு ஆராயும் என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டில் 302,646 டன் டுரியான் பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அப்பழங்களின் ஏற்றுமதி நான்கரை லட்சத்திற்கும் கூடுதலான டன்னாக அதிகரித்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 74.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டுரியான் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.