Latestமலேசியா

டுவிட்டரில் இன துவேசத்தை பதிவிட்ட ஆடவர் கைது

கோலாலம்பூர், ஏப் 13 – பொது ஒழுங்கிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தமது டுவிட்டரில் இன துவேசத்தை பதிவிட்ட 46 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆடவர் நேற்று கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் தொழில் தொடர்புத்துறையின் தலைவர் துணை கமிஷனர் A. Skandaguru தெரிவித்துள்ளார். புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவின் குழு ஒன்று அந்த நபரை கைது செய்ததோடு, அவரது கை தொலைபேசி மற்றும் மடிக் கணினியை பறிமுதல் செய்ததாக அவர் கூறினார். 1948 ஆம்ஆண்டின் நிந்தனை சட்டத்தின் செக்சன் 4 உப்பிரிவு (1) ன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் 1998ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233ஆவது பிரிவின் கீழும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Skandaguru கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!